வியாழன், 3 செப்டம்பர், 2015

நிர்வாக நடைமுறைகள் காற்றில் கற்பூரமாய் கரைவது ஏன்?-நன்றி முருகசெல்வராசன்

வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் அமைப்பிற்கும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கும் மிக நன்றாகவே
"NO WORK NO PAY" 
என்பது தெரியும்.
இது நாடறிந்த விஷயம்.
தற்போது சர்ச்சை இதில் இல்லை.
இந்த 'நோ ஒர்க் நோ பே' எனும் நிலையான அரசு விதியை
நேற்றைய (02.09.15)வேலை நிறுத்தத்திற்கு
இன்றே(03.09.15) தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர், மாவட்டத்தொடக்கக் கல்விஅலுவலர்கள், உதவித்/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்
வேறெதிலும் இல்லாத ஆர்வமுடன்,
மிகு வெகு அவசரத்துடன, இதறகென்றே காத்திருந்ததுப்போன்று பணிபபதிவேடுகளில் பதிவு செய்வதும், ஊதியப் பிடித்தம் வழியிலான சேமிப்புத்
தொகையை கணக்கிட்டு அரசுக்கு அனுப்புவதும்,அலுவலக எடுபிடி ஆசிரியர்களை கைத்தடிகளாய் வைத்துக்கொண்டு "ஊதியம் போசசே" என வேலை நிறுத்த ஆசிரியர்களிடம் கதை
அளப்பதும் கண்டனத்திற்கு உரியதாகும்.
இத்தகு மிக மோசமான இன்றைய நிருவாக நடைமுறைச்செயல்பாடு துரதிருஷ்டவசமானதாகும்.
ஊதியம் பிடித்தம் செய்வது சார்ந்த
நிர்வாக நடைமுறைகள் , மரபு சார்ந்த நடைமுறைச் செயல்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் ஒதுக்கி வைத்து விட்டு, காற்றில் பறக்க விட்டு விட்டு இவ்வளவு அவசரம் காட்டி இருப்பது பலத்த சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.
சுற்றுச் சூழல் நலன் கருதி காகிதப்பயண்பாடு குறைக்கபபடவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுஉள்ளதால் "கால்கடுதாசி கடிதம்" இன்றி ஆசிரியர்களிடம் ஊதியப் பிடித்தம் செய்யப்படுகிறதா?
இது என்ன வகை செயல்பாடு?
என்ன நிலை நியாயம்?
-முருகசெல்வராசன்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்