நாமக்கல்: "இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், அகில இந்திய பொது வேலை நிறுத்தக் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம், நாமக்கல் அண்ணாசிலை அருகில், நாளை (செப்., 2) நடக்கிறது' என, மாவட்ட அமைப்பாளர் முருக செல்வராசன் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: இந்திய மத்திய தொழிற்சங்கங்களின் நாளை (செப்., 20) தேசிய அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின், 12 அம்ச கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு இடைநிலை, சாதாரண நிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். மேலும், தமிழக சட்டசபை தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாளை (செப்., 2) அகில இந்திய வேலை நிறுத்தக் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம், நாமக்கல் அண்ணா சிலை முன், மாலை, 5 மணிக்கு நடக்கிறது. மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமை வகிக்கிறார். செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். மாநில துணைத் தலைவர்கள் சரவணமுத்து, பெரியசாமி, மாவட்டத் தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின், மாவட்ட அமைப்பாளர் முருக செல்வராசன், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசுகிறார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக