உத்திரமேரூர்: அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கிலத்திறன் வளர்ச்சி குறித்த பயிற்சி முகாம், உத்திரமேரூரில் நேற்று நடந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 85 அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஆங்கில மொழியை குழந்தைகளுக்கு எளிதான முறையில் கற்பிக்க வேண்டிய வழி முறைகள் குறித்தும், செய்முறைகள் மூலம் மாணவர்களுக்கு உணர்த்துதல் குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் வட்டார மேற்பார்வையாளர் உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:
கருத்துரையிடுக