ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

து.பிராங்க்ளின் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுக்காடு-வணங்குகிறோம்

தங்களது அர்ப்பணிப்பு உணர்வு, சலியாத உழைப்பு, தளராத நம்பிக்கை, புதிய அணுகுமுறை இவற்றின் மூலம் கல்விப் பணியில் அற்புதங்களை நிகழ்த்திவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த சனிக்கிழமையன்று, 9 பிரிவுகளில் புதிய தலைமுஇறை ஆசிரியர் விருது வழங்கி கெளரவித்ததன புதிய தலைமுறை இதழ்கள். அவர்களை இங்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்
_______________
1.புதுமைக்கான விருது
து.பிராங்க்ளின்
அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுக்காடு
பணியாற்றிய பத்து ஆண்டுகளில் இராமம் பாளையம் துவக்கப் பள்ளியை முற்றிலும் கணினி மயமாகவும் குளிர்சாதன வசதியுடனும் கூடிய நவீன பள்ளியாக மாற்றி சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தியுள்ளார்.
இணையதள வசதியுடன் கூடிய கணினிகள், மின்விளக்குகள், கரும்பலகைக்குப் பதிலாக டிஜிட்டல் பலகைகள், சுவர் முழுவதும் வண்ணப்படங்கள் என மின்னுகிறது இவரது வகுப்பறை. மாணவர்கள் குழுவாக கற்க வட்ட மேஜைகள், டி.வி.டி கள் அடங்கிய டிஜிட்டல் நூலகம், ஆய்வக உபகரணங்கள் என அனைத்தையும் அரசின் உதவியில்லாமல் சில நல்ல உள்ளங்களிடம் உதவி பெற்று மாற்றியுள்ளார்.
இவரது வகுப்பறையைப் பார்வையிட வெளிமாநிலங்களில் இருந்து ஆசிரியர்களும் கல்வியாளர்களும் வந்து செல்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்களும் விலகி அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார்கள். இப்பள்ளி மாணவர்களின் சீருடை வழக்கமான அரசுப் பள்ளிகளைப் போல் அல்லாமல் நகரத்து பள்ளி மாணவர்களைப் போல மிடுக்காக வடிவமைத்துள்ளார்.
National Builders Award , சிறந்த மாற்றத்திற்கான ஆசிரியர் விருது, இலட்சிய ஆசிரியர் விருது, தேசமிதரா விருது, கல்வித்துறை மேம்பாட்டிற்கான விருது,ஆகியவற்றினை பெற்ற இவர் தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான காமராசர் விருதினைப் பள்ளிக்கும் பெற்றுத் தந்திருக்கிறார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்