தங்களது அர்ப்பணிப்பு உணர்வு, சலியாத உழைப்பு, தளராத நம்பிக்கை, புதிய அணுகுமுறை இவற்றின் மூலம் கல்விப் பணியில் அற்புதங்களை நிகழ்த்திவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த சனிக்கிழமையன்று, 9 பிரிவுகளில் புதிய தலைமுறை ஆசிரியர் விருது வழங்கி கெளரவித்ததன புதிய தலைமுறை இதழ்கள். அவர்களை இங்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்
__________________
கிராமப்புற சேவைக்கான விருது
ஆ.கருப்பையன்
அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,நெடுவாசல்(வடக்கு)
__________________
கிராமப்புற சேவைக்கான விருது
ஆ.கருப்பையன்
அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,நெடுவாசல்(வடக்கு)
குழந்தை தொழிலாளியாக பள்ளிப்பருவத்தைக் கடந்தவர். பதினாறு ஆண்டுகால ஆசிரியர் பணிக்குப் பிறகு தலைமை ஆசிரியரானதும் யாருமே விரும்பாத புறக்கணிக்கப்பட்ட, மிக மோசமான கல்வி சூழல் உள்ள கிராமத்து பள்ளியை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு வாங்கி பொறுப்பேற்றுக் கொண்டார். கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்திய பள்ளி வளாகத்தை ஊர் இளைஞர்கள் துணை கொண்டு மாற்றினார். அரசின் உதவியோடு கிராம மக்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்தார். தொடர்ந்து சுகாதாரத்தைப் பற்றி போதித்து முழுசுகாதார கிராமத்துக்கான மூன்று லட்ச ரூபாய் பரிசாக பெற்றுத்தந்தார். இடிந்த பள்ளிக் கட்டடங்களை புதுப்பித்தார். பள்ளியைக் கணினி மயமாக்கினார். வகுப்புகளை வீடியோ பதிவு செய்து அன்று பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு மறுநாள் போட்டுக் காண்பித்துப் பாடம் கற்பிக்கிறார். அரசின் மதிய உணவோடு காலை உணவும் வழங்க அறக்கட்டளைகள் மூலம் வழிசெய்துள்ளார். இவர்தான் முதன்முதலாக மாணவர்களுக்கு நவதானியக் கஞ்சியை வழங்கினார். அதன் பிறகே சமூக நலத்துறை நவதானியக்கஞ்சித் திட்டத்தை அறிமுகம் செய்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் விருது, UNICEF விருது, டெல்லி தமிழ்ச் சங்க விருது, அழகப்பா பல்கலைக்கழக விருது, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, குடியரசு தலைவர் விருது என பல விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றிருக்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் விருது, UNICEF விருது, டெல்லி தமிழ்ச் சங்க விருது, அழகப்பா பல்கலைக்கழக விருது, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, குடியரசு தலைவர் விருது என பல விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றிருக்கிறார்.


0 comments:
கருத்துரையிடுக