தஞ்சை மேம்பாலம் அருகே பார்வையற்றோர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 150 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில் அடிப்படை வசதி செய்யக்கோரியும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க கோரியும் மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி இன்று நடைபெற்ற தேர்வையும் மாணவர்கள் புறக்கணித்தனர். அவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

0 comments:
கருத்துரையிடுக