புதன், 23 செப்டம்பர், 2015

TET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

புதுச்சேரி கல்வித் துறை பணியிட நியமனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 
        இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் ல.குமாரிடம், புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் வை.பாலா அளித்த மனு:

             கடந்த ஜூலை 2012-ல் தமிழக அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (பஉப) புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த சுமார் 8,500 பேர் பங்கேற்றனர். இதில் 20 பேர் மட்டுமே 90 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்று தேர்வாகி இருந்தனர்.கடினமான இதில் தேர்ச்சி பெற்ற இவர்களில் பலர் இன்று வரை அரசுப் பணி கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.
 
250 பேர் காத்திருப்பு: 
                 தகுதித் தேர்வில் இதுவரை 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சுமார் 250 பேர் அரசுப் பணிக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தகுதித் தேர்வு மதிப்பெண்களை தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தகுதியுடன் பணிக்காக காத்துக்கொண்டிப்போர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது நிரப்பப்பட உள்ள 425 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்