வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வருங்கால வைப்பு நிதி புகார்களுக்குத் தீர்வுகாண புதிய திட்டம்

தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஒ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற பெயரில் புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, மாதம்தோறும் 10 ஆம் தேதி சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறும்.
அன்றைய தினம் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணப்படும். இத்திட்டத்தின்படி, இம்மாதத்துக்கான குறைதீர்வு முகாம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வருங்கால வைப்பு நிதி தொடர்பான அனைத்துப் புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்