ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

எஸ். உமா மகேஸ்வரி அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பட்டி-வணங்குகிறோம்

அறிவியல் விழிப்புணர்விற்கான விருது
எஸ். உமா மகேஸ்வரி
அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பட்டி
இடைநிலை ஆசிரியராய் தன் பணியைத் துவக்கியவர் பட்டதாரி ஆசிரியராய் உயர்ந்த போது கணிதம் மட்டுமின்றி அறிவியலையும் , இலக்கியத்தையும் கற்றுத் தரும் பன்முகத் திறமையுடன் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் பணியை அறிவியல் பூர்வமாக அணுகுவதால் ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராய் பரிணாமம் பெற்றுள்ளார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு நடைமுறைக்கு வரும் முன்பே செயல்படுத்தியவர்.
விளையாட்டு மூலம் கணிதத்தை கற்றுத் தருபவர். பொம்மலாட்டம் மூலம் அறிவியலையும் இவர் கற்றுத்தருகிறார். இவரால் ஊக்கமுற்ற மாணவர்கள் தேசிய அளவில் அறிவியல் கண்காட்சிகளில் சாதித்துள்ளார்கள். இவரின் மேற்பார்வையில் மாணவர்கள் பலர் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்துள்ளனர்.
HOT potatoes என்கிற மென்பொருள் பயன்படுத்தி இவர் உருவாக்கிய DIGITAL CONTENT மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழகம் முழுமைக்கும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
BOLT விருது,TATA நிறுவனம் வழங்கிய மகளிர் தின விருது, சிகரம் தொட்ட ஆசிரியர் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர்.அகில உலக குழந்தைகள் திரைப்படவிழாவில் தமிழகத்தின் ஆசிரியர் பிரதிநிதியாகவும் கலந்து கொண்டுள்ளார்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்