மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கான விருது
சா.தர்மராஜ்
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தேனாடு
சா.தர்மராஜ்
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தேனாடு
மலைவாழ் மக்களின் இருப்பிடங்களைக் கண்டடைந்து அவர்களோடு சகஜமாவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக மலைவாழ் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது குழந்தைகளை பள்ளிக்கு வர வைத்திருக்கிறார். இடைநிற்கும் மலைவாழ் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரச் செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார். இவரது உதவி குழந்தைகளோடு நின்றுவிடாமல் அவர்களுடைய குடும்பங்கள் வரை நீள்கிறது.
மலைவாழ் மக்களின் இடையே அறியாமையால் பரவி வரும் நோய் குறித்தும் அதில் இருந்து காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு முகாமும் இலவச மருத்துவ முகாமும் நடத்தி வருகிறார்.
மலைவாழ் மக்களின் இடையே அறியாமையால் பரவி வரும் நோய் குறித்தும் அதில் இருந்து காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு முகாமும் இலவச மருத்துவ முகாமும் நடத்தி வருகிறார்.
நவீன கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவர் தயாரித்த ஒளி-ஒலொ குறுந்தகடுகள் இவரது பள்ளிக்கு மட்டுமல்லாமல் பல பள்ளிகளுக்குப் பயன்படுகின்றன. யோகா ஓவியம் போன்ற கலைகளையும் கற்றுத்தருகிறார். இவரே கேமிராவை எடுத்துக் கொண்டு மலைகள் அணைகள் என சுற்றித் திரிந்து படம் பிடித்து மாணவர்களுக்குக் கற்பிக்கிறார். இவரது நிகரில்லா பணிக்காக ITLA AWARD, Intel வழங்கிய “Technology in education award” போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.

0 comments:
கருத்துரையிடுக