ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

சு.செந்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மலையம் பாளையம்-வணங்குகிறோம்

.பெண்குழந்தை கல்விக்கான விருது
சு.செந்தில்
அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மலையம் பாளையம்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓராசிரியர் பள்ளி ஒன்றில் இரண்டாவது ஆசிரியராக சேர்ந்தார்.முதல் நாளே அதிர்ச்சி. மதிய உணவிற்குப் பிறகு யாருமே பள்ளியில் இருப்பதில்லை. குறிப்பாக பெண்குழந்தைகள் பள்ளிக்கே வருவதில்லை.
அதன் காரணங்களாக இளவயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்தல் , பெண்குழந்தைகளின் அதிக இறப்பு விகிதம், விவசாய கூலிகளான பெற்றோர் அடிக்கடி இடம்பெயருவதால் குழந்தைகளை அழைத்துச் சென்று விடுதல் போன்றவற்றை கண்டுபிடித்தார்.
வீடு வீடாகச் சென்று பெண்குழந்தைகளின் கல்வி பற்றிய அவசியத்தை எடுத்துக் கூறினார். பெண்குழந்தைகளுக்கு இளவயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் அவ்வூரின் வழக்கத்தை உடைத்து அவர்களை பள்ளிக்கு வர வைத்தார். இடம் பெயரும் குடும்பங்களின் பெண்குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தார். வீதி நாடகங்கள் நடத்தினார்.
ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளியில் இப்போது அனைத்து வகுப்பினரும் பயில்கிறார்கள். பக்கத்து மாவட்டத்தில் இருந்து வேன் மூலம் குழந்தைகள் வந்து பயிலும் அளவுக்கு மாற்றினார். இவரது அயராத உழைப்பால் இருபது பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் இப்போது 234 குழந்தைகள் பயில்கிறார்கள்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

1 கருத்து:

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்