செவ்வாய், 6 அக்டோபர், 2015

இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை

இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபடுவோர் கருவூலத்துக்கான சாவிகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் அளிக்க வேண்டும். சாவியை ஒப்படைப்பதில் எந்த அதிகாரியும் நியமிக்கப்படாவிட்டால், கருவூல அலுவலரே தனது கைவசம் சாவியை வைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் தினசரி அலுவலகப் பணிகள் பாதிக்கும் வகையில், போராட்டங்களில் ஈடுபடுவது போன்று அச்சுறுத்துவதோ, பங்கேற்பதோ தமிழ்நாடு அரசு பணியாளர் விதிகளுக்கு எதிரானதாகும்.
மேலும், பொது மக்களுக்கு சேவைகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், 2003-இல் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, அவர்கள் தமிழ்நாடு அத்தியாவசியப் பராமரிப்புகள் சட்டத்தின் கீழ் வருகின்றனர். எனவே, செவ்வாய்க்கிழமையன்று பணிக்கு வராமல், ஒட்டுமொத்த விடுப்பில் பங்கேற்போரின் விடுப்பானது, சட்டப்படி அங்கீகரிக்கப்படாது. பணி செய்யாததால், ஊதியம் வழங்கப்படாது.
ஊழியர்களின் வருகைப் பதிவேடு குறித்த விவரங்களை செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்குள்ளாக, இதற்காக வரையறுக்கப்பட்ட அட்டவணையில் விளக்கமாகக் குறிப்பிட்டு மின்னஞ்சல், தொலைநகர், தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்க வேண்டும்.
மண்டல இணை இயக்குநர்கள் தலைமை இடங்களில் அமர்ந்து மாவட்ட கருவூல-கணக்குத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்