ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளில், 1,079 இடங்களுக்கு, நாளை முதல்நிலை தகுதித் தேர்வு நடக்கிறது. இந்திய அரசு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பதவிகளில், 1,079 இடங்கள் காலியாக உள்ளன. இதில், 68 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. அனைத்து காலியிடங்களையும் நிரப்புவதற்கான முதல்நிலை தகுதித் தேர்வு, ஏப்., 27ல் அறிவிக்கப்பட்டது. மே, 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த தேர்வு, நாடு முழுவதும், 72 இடங்களில் நாளை நடக்கின்றன. தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் வேலுாரில் நடக்கின்றன. புதுவையிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வில், 10 லட்சம் பேர் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். இந்திய வனத்துறை பணிகளுக்கு, 110 காலியிடங்களை நிரப்பவும், நாளை தேர்வு நடத்தப்படுகிறது.
சனி, 6 ஆகஸ்ட், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக