தொடக்க பள்ளிகளில், மூன்று லட்சம் ஆசிரியர் பணியிடங்களுக்கான, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. நாளை, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.
இதேபோல, இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிலும், தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாக, கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 'இந்த ஆண்டு, காலி இடங்களை மறைத்து, அதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மறைமுகமாக இடமாறுதல் வழங்கக் கூடாது' என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

0 comments:
கருத்துரையிடுக