எம்.டி., ஓமியோபதி தரவரிசை வெளியீடு
சென்னை: எம்.டி., ஓமியோபதி படிப்புக்கான தரவரிசை பட்டியலை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், கன்னியாகுமரியில் உள்ள சுயநிதி கல்லுாரியில், எம்.டி., ஓமியோபதி படிப்பில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 15 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூலை, 25ல் முடிந்தது. 15 இடங்களுக்கு, 27 பேர் மட்டுமே
விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

0 comments:
கருத்துரையிடுக