சென்னை பல்கலை இன்று எம்.எல்., ரிசல்ட்
சென்னை: சென்னை பல்கலையின் எம்.எல்., தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் அறிவிப்பு: சென்னை பல்கலையின், எம்.எல்., முதுநிலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று பிற்பகல் வெளியாகும். முடிவை, சென்னை பல்கலை இணையதளத்தில் அறியலாம். மறுமதிப்பீட்டுக்கு ஆக., 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பரில் நடக்கவுள்ள தேர்வில் பங்கேற்க, அக்., 17 வரை விண்ணப்பிக்கலாம். தாமதமான விண்ணப்பங்களை, அக்., 25க்குள் செலுத்தலாம். அதற்கு அபராத தொகை வசூலிக்கப்படும். மறுமதிப்பீடு மற்றும் தேர்வுக்கான விண்ணப்பங்களை, பல்கலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக