வெள்ளி, 25 ஜூலை, 2014

தெரிந்து கொள்ளலாம் வாங்க



தெரிந்து கொள்ளலாம் வாங்க

///////////////////////////////////////////
விண்டோஸ் 7 விந்தைகள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளிகளிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன.
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும்,
விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும்,
தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர்.
ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத்
தெரியாமலேயே உள்ளன. இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல்
இருப்பதுதான். பொதுவாகவே, கம்ப்யூட்டர் இயக்கத்தில், Undo cumented Features
எனச் சில உண்டு.
இவற்றைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள்
மற்றவர்களுக்கு டாகுமெண்ட் செய்து வெளியிட்டால் தான் உண்டு. மேலும், இந்த
சிஸ்டத்தினை வடிவமைத்தவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்திடும் வகையில் சில
விசேஷ அம்சங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள்.
அவற்றை Easter Eggs என அழைப்பார்கள். அப்படிப்பட்ட சில வசதிகள் குறித்தும்
Easter Eggs குறித்தும் இங்கு காணலாம்.

சில ஷார்ட்கட் கீகள்
1. புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை
அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே
திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ
திறக்கப்படும்.
எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட்
ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ
ஒன்று திறக்கப்படும்.

2. ஐகான் அழுத்துகையில், ஷிப்ட் + கண்ட்ரோல் கீகளை அழுத்திக் கொண்டு
செய்தாலும், மேலே கூறிய செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதில் என்ன வேறுபாடு
என்றால், இந்த விண்டோ, முற்றிலும் அட்மினிஸ்ட் ரேட்டர் உரிமையுடன்
திறக்கப்படும்.

3. கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, இதே போல புரோகிராம் ஐகான் ஒன்றில்
கிளிக் செய்தால், திறந்து செயல்படுத்தப்படும் விண்டோக்களில், இறுதியாகத்
திறந்த விண்டோ திறக்கப்படும்.
திறக்கப்பட்ட விண்டோவின் மேல் பட்டியில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், அது
மினிமைஸ் செய்யப்படும். இதனை மானிட்டர் திரையில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு
சென்று அமைக்கலாம். இதன் அளவினை நாம் விரும்பும் வகையில் சிறிதாக்கலாம்;
பெரியதாகவும் அமைக்கலாம். இதனை மவுஸ் தொடாமலும் அமைக்கலாம் என்பது
உங்களுக்குத் தெரியுமா? இதோ அவை:
விண்டோஸ் லோகோ கீயினை அழுத்திக் கொண்டு அப் அம்புக்குறியினை அழுத்தினால்,
விண்டோவின் அளவைப் பெரிதாக்கலாம்.
அதேபோல, விண்டோஸ் லோகோ கீயினை, வலது அல்லது இடது அம்புக் குறியுடன் அழுத்த,
விண்டோ திரையின் இடது அல்லது வலது பக்கமாக நகர்த்தப்படும்.


  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்