வெள்ளி, 30 ஜனவரி, 2015

67 வருட சுதந்திர இந்திய ஜனநாயகத்தின் சாதனையை பாரீர்....

67 வருட சுதந்திர இந்திய ஜனநாயகத்தின்
சாதனையை பாரீர்....
நாட்டின் தலைநகர் டில்லியில் உள்ள மிகப்பெரிய
மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனை.
டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள
பொதுமக்கள்
இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகளவிலான நோயாளிகள் காரணமாக
மருத்துவமனை தற்போது திணறி வருகிறது.
இந்நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத
அளவிற்கு டில்லியில் கடும் பனி நிலவுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி, புற்றுநோய்க்காக
சிகிச்சை பெற்று வரும் உ.பி., மாநிலம் புலந்தர்ஷார்
பகுதியைச் சேர்ந்த சிறுவன்
ஒருவனுக்கு இதுவரை மருத்துவமனையில்
படுக்கை வழங்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் இரு கண்களையும் இழந்த அந்த சிறுவன்
தனது தந்தையுடன் தினமும் இரவு அருகிலுள்ள
கழிவறை ஒன்றில் தங்கி வருகிறான்.
இவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள்
பெரும்பாலானோர்
கழிவறையிலேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தங்குவது மட்டுமின்றி, சமைப்பதும் கூட அங்கு தான்.
தற்போது கடும் குளிர் காரணமாக வீடிழந்தோரும்
கழிவறைகளை நோக்கி வருவதால், அங்கு பெரும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கழிவறையில் படுக்க இடம்
கிடைத்ததே என்று நிம்மதியாக உறங்கும் அந்த
குடும்பத்தை பாருங்கள் ,
தனக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து போராட
வேண்டும் என்ற எண்ணம் வராமல் ,குறைந்த பட்சம்
இந்த வசதி கிடைத்ததே என நினைக்கும் படி மக்கள்
மனம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து
இந்த அவலத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை...
பகிர்ந்துகொண்டே இருங்கள்
நம் எண்ணங்கள் தோழர்களே தோழிகளே......
உங்கள் பொன்னான விரல்களின் பகிர்வினால்.
இப்படி பாவப்பட்ட நம் சகோதர சகோதரிகள் அவலம்
மாற்றி அமைக்கப்படட்டும்.

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்