செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஓரு இடைநிலை ஆசிரியரின் அவலக்குரல்

அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இ.ஆ கள்தான். அவர்களது கோரிக்கையை மட்டும் பிரதானமாக வைத்து தொடக்கப்பள்ளி சங்கங்கள் மட்டும் இணைந்து வலுவான வேலைநிறுத்தப் போராட்டம் செய்யாமல் ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள சங்கங்களையும் சேர்த்து பத்து இருபது கோரிக்கைகளையும் வைத்து ஒப்புக்கு போராட்டம் என அறிவிப்பதன் பின்னணி என்னவோ? இத்தனை கோரிக்கைகளில் இ.ஆ ஊதியக் கோரிக்கையையும், 50 சதவீத அகவிலைப்படியை பேவுடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்த எடுப்பிலேயே நிதி இல்லை என நிராகரித்துவிட்டு மீதியுள்ள பத்தில் எட்டை நமக்கு நிறைவேற்றித்தந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் மூத்த சங்க நிர்வாகிகள் செயல்படுவது போலத் தோன்றுகிறது. இதற்கு மறுப்பு இருந்தால் மரியாதைக்குரிய மூத்த நிர்வாகிகள் சரியான விளக்கம் அளிப்பது மட்டுமல்லாது செயலிலும் காட்ட வேண்டுமென வேண்டுகிறேன். இப்படிக்கு மிகுந்த பாதிப்படைந்த இடைநிலை ஆசிரியர் சமுதாயத்தின் குரலாக ஒருவன்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்