தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட 14 வகையான கல்வி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் முதல் நாள் அன்று விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் முதல் முறையாக விடுமுறைக்கு முன்பே இந்த விலையில்லா பாட புத்தகங்களை வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அதன்படி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூட கோடை விடுமுறைக்கு முன்பே பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

0 comments:
கருத்துரையிடுக