'பறக்கும் படை' ஆய்வு முன்கூட்டியே கசிகிறதா? அரசு பள்ளிகள் மட்டும் சிக்கும் பின்னணி
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை கண்காணிக்கும் பறக்கும் படை குழுக்களின் செயல்பாடுகள் முன்கூட்டியே வெளியாகுவதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஆசிரியர்கள் - கல்வி அதிகாரிகள் கொண்ட 188 'ஸ்டேன்டிங்' குழுக்கள், மற்றும் இணை இயக்குனர், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 14 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை இணை இயக்குனர் உஷாராணி கட்டுப்பாட்டில் உள்ளன. இக்குழு ஆய்வு செய்ய போகும் இடங்கள் முன்கூட்டியே சில பள்ளிகளுக்கு தெரிந்து விடுவதாகவும், சில பள்ளிகளில் பெயரளவில் ஆய்வு நடப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுவரை ஆங்கிலம், வணிகவியல், கணிதம் தேர்வுகளில் 'பிட்' எழுதி பிடிபட்டது அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே. உதவி பெறும் பள்ளிகளில் பறக்கும் படை குழுக்கள் ஆய்வு மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறுகையில், "இணை இயக்குனர் பறக்கும் படை குழுவிடம் தான் இதுவரை 'பிட்' எழுதிய மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அரசு பள்ளிகள் தவிர பிற பள்ளிகளிலும் பறக்கும் படையின் ஆய்வை துரிதப்படுத்த வேண்டும்" என்றனர்.

0 comments:
கருத்துரையிடுக