பேஸ்புக் மூலம் இனி பணம் அனுப்பலாம்
சமூக வலைதளங்களில் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக், பணத்தை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலம், தற்போது அழைப்பு வசதிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, அந்த மெசேஞ்ஜர் மூலம், பணம் அனுப்பும் வசதியை, பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது.
ஆப்பிள், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் மூலம், டெபிட் கார்டு துணையுடன் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்று பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் டெபிட் கார்ட் எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு பின் கோடு வழங்கப்படும் என்றும், அதனைக்கொண்டு அவர்கள் பணத்தை அனுப்பலாம்.
ஆப்பிள் போன் பயனாளர்கள், விரல்ரேகையை பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பேஸ்புக், தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
கீழே உள்ள செய்தியை படிக்க செய்தியின் மீது கிளிக் செய்யவும்
இலங்கையின் அனுபவ

0 comments:
கருத்துரையிடுக