அரசு பணி தகுதியின் அடிப்படையில் என்பது மாறி இப்பொழுது பணத்தின் தகுதியை வைத்து ஏலம் விட்டுக் கொண்டுக் இருகின்றனர் .
சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்ப்படும் ஆசிரியர் நியமன ஆணையம் தற்பொழுது நேரடி கணினி ஆசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை வெளியிட்டது .
பதவி மூப்பின் அடிப்படையிலும் திறமையின் அடிப்படையிலும் நியமனம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டு, தற்பொழுது சான்றிதழ் சரிப் பார்ப்பு பணியும் முடிவடைந்து உள்ள இந்த நிலையில், நியமன ஆணை பிறப்பிதர்க்கு நேரடி விற்பனை செய்ய பிரதிநிதிகளை முடக்கி விட்டு உள்ளார்கள் அதிகாரிகள் .
நம் சிறப்பு நிருபர் குழு நடத்திய ஆய்வில் தரகர்கள் நம்மிடையே பேரத்தை தொடங்கினர் .எட்டு லட்சத்தில் தொடங்கிய பேரம் இறுதியாக ஆறு லட்சத்தில் நிறைவு பெற்றது .
முதல் கட்டமாக மூன்று லட்சமும் நியமன ஆணை கிடைத்தவுடன் மீதியும் கட்ட வேண்டும் என்றனர் .ஒப்புக்கொண்ட நாம் பணத்தை சம்மந்தப்பட்ட அதிகரியிடம் தான் கொடுப்போம் என்பதற்கு அதிகாரி கோட்டா முடிந்து விட்டது என்றும் ,அமைச்சர் கோட்டா தான் தற்சமயம் உள்ளது என்றும் பணத்தை அமைச்சரின் உதவியாளர் பெற்றுக் கொள்வார் என்றும் உறுதி அளித்தார் .
சொன்ன மாதிரியே கல்வித் துறை அமைச்சரின் சிகப்பு விளக்கு பொருத்திய காரில் வந்த உதவியாளர் நியமன ஆணைக்கு நான் பொறுப்பு என்று வாக்குறுதி அளித்து சென்றவர் அடுத்த அரை மணி நேரத்தில் என்ன நினைத்தாரோ நாம் அணுகிய தரகரை தொடர்புக் கொண்டு "அமைச்சர் கோட்டா எதுவும் இல்லை எனவும் ,மேலும் பணி ஆணை நேர்மையாக நடைப் பெறுவதாகவும் ,தன்னை அணுகிய விவரம் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர் .உண்மை நிலவரம் என்னவென்று மக்கள் அறிவர் .
ஆனால் ஆசிரியர் பதவிக் கிடைக்கும் ,தன் குடும்பம் தன்னால் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெரும் என்று பெரும் கனவில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும்
எண்ணற்ற அப்பாவி இளைஞர்கள் பலர் தன் வாழ்வை தொலைத்து இன்னும் காத்து கொண்டு இருகின்றனர் .
பணம் படைத்தவர்கள் ஏன் அரசாங்க பதவியை தேடுகின்றனர் ,அரசாங்கம் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக நடந்து கொள்வதை கை விடுவது எப்பொழுது என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .இந்த பொறுக்கி தனத்தை துகில் உரிக்கும் வரை நம் பணி ஓயாது .
-ஆசிரியர்


0 comments:
கருத்துரையிடுக