-கரூர்: இரும்பு ஸ்கேலால் அடித்தது குறித்து, பெற்றோர் தட்டிக் கேட்டதால், 2ம் வகுப்பு மாணவனை, நான்கு நாட்களாக வகுப்பறைக்கு வெளியில் நிறுத்தி தண்டனை வழங்கியதாக, தொடக்கப் பள்ளி ஆசிரியை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பள்ளியை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
முற்றுகைகரூர் அருகே, தான்தோன்றிமலையில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியையாக சாந்தி உள்ளார். 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.அதே கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் சவுந்தர்ராஜன், 7, இப்பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கிறான்.வகுப்பு ஆசிரியை பாக்கியம், நான்கு நாட்களாக, சவுந்தர்ராஜனை, வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வெளியில் நிறுத்தி வைத்ததாக கூறி, மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை, 9:15 மணிக்கு பள்ளியை முற்றுகையிட்டனர்.
அவர்களுடன் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமதிலகம், பசுபதிபாளையம் போலீசார் பேச்சு நடத்தினர்.
அப்போது, போராட்டம் நடத்தியவர்கள் கூறியதாவது:கடந்த வாரம், குறும்பு செய்ததாக, சவுந்தர்ராஜனை பாக்கியம் இரும்பு ஸ்கேலால் அடித்துள்ளார். இதில், மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டது. மறுநாள், மாணவனின் பெற்றோர், இது பற்றி பாக்கியத்திடம் கேட்டுள்ளனர்.
'மாணவர்களுடன் விளையாடியபோது, தவறி விழுந்து காயமடைந்து விட்டான்' என, கூறியுள்ளார். அவர்கள் சென்ற பின், தான் அடித்தது குறித்து பெற்றோரிடம் கூறியதால், கடந்த நான்கு நாட்களாக, சவுந்தர்ராஜனை வகுப்பறைக்குள் பாக்கியம் அனுமதிக்கவில்லை. தலைமை ஆசிரியை கூறியும், மாணவனை வகுப்புக்குள் அனுமதிக்காத ஆசிரியை மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டம்
விசாரணை மேற்கொண்ட, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கண்ணகி, “ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்,” என, தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவனின் உறவினர்களும், பொதுமக்களும் முற்றுகை போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

குழந்தைகளை அடிப்பது மிக மோசமான வன்முறை கலாசாரம். இதற்கு முதலில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் மூலம், மாணவர்களை கையாளும் விதம் குறித்து, பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில், குடும்பங்களில் உள்ள சொந்தப் பிரச்னையால், தங்கள் கோபத்தை மாணவ, மாணவியரிடம் காட்டக்கூடாது. தாங்களும் பெற்றோர் என்பதை நினைத்து, தங்கள் வகுப்பு மாணவ, மாணவியரை குழந்தைகளாக கருத வேண்டும்.ஆர்.தனஞ்செயன் ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அதிகாரி
ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு கல்வி விதிகள் தனியாக உள்ளன. அதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாணவ, மாணவியரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. முதலில் கைகளில் பிரம்பு அல்லது மர ஸ்கேல் வைத்திருக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். குழந்தைகளுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தண்டனை அளித்தால், அந்த ஆசிரியரை நுகர்வோர் சட்டத்தின் கீழ் கொண்டு வரலாம். இதேபோல், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோரும் மாணவ, மாணவியரை பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டியது கடமை.டி.கே.கிருஷ்ணகுமார் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்.

0 comments:
கருத்துரையிடுக