சனி, 8 ஆகஸ்ட், 2015

சுதந்திர தின கொடியேற்ற நேரம் மாற்றம்

-ஊட்டி: தமிழகத்தில் இதுவரை காலை 8 மணிக்கு அரசு சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்து வந்தது. மலைப்பகுதியான நீலகிரியில் மட்டும் காலை 10 மணிக்கு விழா நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலை 10 மணிக்கு தேசிய கொடியேற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வந்துள்ளது.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’ நீலகிரியில் காலை 10 மணி என்பது ஏற்புடையது. ஆனால் சமவெளிப் பகுதிகளில் வெயில் கொளுத்தும் நிலையில் 10 மணி என்பது சாத்தியமில்லை. மாணவர்கள் கலைநிகழ்ச்சி முடிய நண்பகல் 12 மணி ஆகலாம். இதனால் அவர்களுக்கு மயக்கம் போன்ற பல சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்