செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர் சங்கத்தினர் பேரணி

சேலம்: தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, சேலத்தில் பேரணி நடந்தது. சேலம் பழைய நாட்டாண்மைக்கழக கட்டிடத்தில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வரை, பேரணியாக சென்று கலெக்டரிம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், தமிழகத்தில், 16 ஆயிரத்து, 549 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டனர். பணி நிரவல் என்ற பெயரில், குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் எங்களை, தொலைவில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்த வேண்டும். அதன்படி, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்