ஊட்டி: ஐந்தாண்டு பயிற்சியின் விளைவாக, குறு மைய அளவிலான தடகளப் போட்டியில், நஞ்சநாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பதக்க வேட்டையாடினர்.
அரசுப் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான, தடகள போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, ஊட்டி குறு மைய அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.
இதில், ஊட்டி நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், 25 பதக்கங்களை அள்ளி சாதித்தனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாணவன் சசிகுமார், தட்டெறிதலில், மூன்றாமிடம் பெற்றார். மாணவன் கரண் பாண்டியன், உயரம் தாண்டுதலில் முதலிடம், 1,500 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், மாணவன் மாணிக்கம், நீளம் தாண்டுதலில் முதலிடம், மாணவன் விஜய், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம், 800 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், 1,600 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்றனர்.
இந்த மாணவர்கள் குழு, தொடர் ஓட்டத்திலும், வெற்றி பெற்றனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நவீன் குமார், 100 மீ., நீளம் தாண்டுதலில், இரண்டாமிடம், நவீன், 400 மீ., ஓட்டத்தில், இரண்டாமிடம், திலீபன், தட்டெறிதலில் முதலிடம், குண்டெறிதலில் இரண்டாமிடம், திலீப், 1,500 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாணவன் சத்தியமூர்த்தி நீளம் தாண்டுதல், தட்டெறிதலில், முதலிடம் பெற்றார்.
மாணவியர் பிரிவில் பிரித்தி, நீளம் தாண்டுதலில் முதலிடம், 100 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், ஐஸ்வர்யா, நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம், 200 மீ., ஓட்டத்தில், மூன்றாமிடம், ஹரிணி, குண்டெறிதலில் மூன்றாமிடம் பிடித்தனர்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுகுமாரன் கூறுகையில், 'கடந்த, 6ம் வகுப்பில் இருந்து மாணவ, மாணவியருக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்ததன் விளைவு, அவர்கள் உடல், மனதளவில் தயாராகி, வெற்றிகளை குவித்து வருகின்றனர். கடந்தாண்டு, மாணவர்கள் மணி, மாணிக்கம் ஆகியோர் மாநில போட்டிக்கும் தகுதி பெற்றனர்,” என்றார்.
சாதித்த மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர் அர்ஜூனன், பயிற்றுனர் போஜன் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

0 comments:
கருத்துரையிடுக